Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயல்பை விட கூடுதலாக கனமழை பெய்யும் என தகவல் : முந்தைய மழைப்பொழிவு அளவை முறியடிக்கும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை

Extreme levels of rainfall over New South Wales. Extreme levels of flood danger were announced in at least three places.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்யும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழைப்பொழிவு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் இருக்கும் என்பதால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மத்திய மேற்கு பகுதியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகி என்று அம்மா கானத்தின் வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 150 மில்லி மீட்டர் வரை அதிகரிப்பதாற்கான வாய்ப்பு இருப்பாதகவும், பருவநிலை மற்றும் வானியல் அமைப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான மாற்றங்கள் காரணமாக இந்த அதீத மழைப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Extreme levels of rainfall over New South Wales. Extreme levels of flood danger were announced in at least three places..தற்போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடங்கும் மழை பரவலாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிக அளவில் இருக்கும் என்றும், பின்னர் படிப்படியாக குறைந்து இது தெற்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என்றும் வானியல் ஆய்வாளர் Jane Golding தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு அடுத்த சில தினங்களிலேயே பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ளும் வகையில் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் நிலைகளை பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாகாண அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது கணிக்கப்பட்டுள்ள மழையின் அளவு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவான மழையளவு என்றும் முந்தைய பதிவுகளை முறியடிக்கும் வகையில் தற்போதைய மழை பொழிவு இருக்கும் என்றும் Jane Golding கூறியுள்ளார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் அதே நேரத்தில் ஈரப்பதமான நிலை மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடரும் என்றும், இது தெற்கு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாநில அவசரகால மீட்புக் குழுவின் படைப்பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Link Source: shorturl.at/uBSV2