Breaking News

கோலா கரடிகளின் வாழ்விடத்தை பாதுகாக்க மூட்டப்பட்ட தீயில் விழுந்து இரண்டு கோலா கரடிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The tragic incident in which two koala bears were burnt to death after falling into a fire that was set to protect the koala bears' habitat.

விக்டோரியாவிலுள்ள தேசிய பூங்காவில் மரங்கள், செடிகளின் வளர்ச்சியை தடுக்க அவ்வப்போது அதிகாரிகள் தீ மூட்டுவது உண்டு. இதுபோன்ற செயல்பாடுகள் அப்பகுதியில் வாழும் கோலா கரடிகளின் வாழ்விடத்தையும் பாதுகாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வழக்கம் போலவே கடந்த வார இறுதி நாளில் பூங்காவின் தென்மேற்கு பகுதியில் அதிகாரிகள் தீ முட்டியுள்ளனர். இதில் தீ வைக்கப்பட்ட மரத்திலிருந்து 2 கோலா கரடிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. இதை விக்டோரியா மாநில சுற்றுச்சூழல் துறை உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எதற்காக குறிப்பிட்ட பகுதியில் தீ மூட்டப்பட்டது? எவ்வளவு பரப்பளவு வரை தீ வைக்க திட்டமிடப்பட்டது? கோலா கரடிகள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்கிற கோணத்தில் அவர்கள் விசாரணையை துவங்கியுள்ளனர்.