Breaking News

கொரோனா உறுதியானதால் மெல்போர்னில் இரண்டு மருத்துவமனைகளின் மனநல மருத்துவ பிரிவுகள் மூடப்பட்டன !

alfred

மெல்போர்னில் உள்ள இரண்டு மருத்துவமனைகளின் மனநல மருத்துவ பிரிவுகள் மூடப்பட்டன. அங்கு பணிபுரியும் பணியாளருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

Broadmedous-ல் உள்ள Alfred மற்றும் Northern மருத்துவமனையின் மனநல மருத்துவ பிரிவில் பணியில் உள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று அந்த மருத்துவமனைகளின் பணியாளர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 150 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்தப் பெண்ணின் மூன்று வயது குழந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நடந்த இவர்களது குடும்ப விழாவில் பங்கேற்றதன் மூலமாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.Royal Melbourne மருத்துவமனையின் கீழ் வரும் Broadmedous-ல் Alfred மருத்துவமனை மற்றும் Northern மருத்துவமனைகளின் மனநல மருத்துவ பிரிவுகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட இந்தப் பெண் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் பிரிவுகளின் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை கொரோனா தொற்று சிகிச்சையில் 21 பேர் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 25,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.