Breaking News

திருடப்பட்ட தலைமுறைக்காக மன்னிப்பு கேட்ட கூட்டாட்சி பாராளுமன்றம் !

prime minister Kevin Rudd

13 ஆண்டுகளாக திருடப்பட்ட தலைமுறைக்காக கூட்டாட்சி பாராளுமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாக தேசிய மன்னிப்பு கூறப்பட்டது. பழங்குடி ஆஸ்திரேலியர்களை எப்படி கடந்த காலத்தில் மத்திய அரசு நடத்தியது என்பதற்கு மன்னிப்பு கோரும் விதமாக 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி முன்னாள் பிரதம மந்திரி Kevin Rudd வரலாற்று மன்னிப்பு கோரினார்.

பிரதமர் Scott Morrison திங்கள் அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, இதே உணர்வோடு உண்மையான மன்னிப்பு கோரினார். மேலும் அவர் கூறும்பொழுது, உடன் பிறந்தவர்கள் பிரிக்கப்பட்டனர், கட்டாயமான அடிமைத்தனம், அக்கறையில்லாத பாதுகாப்பு நலன் நிறுவனங்கள், இறந்த குழந்தைகளை தேடும் பெற்றோர், முடிவில்லாத வலி தலைமுறைகளாக தொடர்ந்தன. பல அரக்கத்தனமான செயல்கள் நடைபெற்றன. பழங்குடி மக்கள் பல துன்பங்களை அடைந்தனர். அதற்கு நான் வருந்துகிறேன். உண்மையான மன்னிப்பு கோருகிறேன் என்று வருத்தத்துடன் கூறினார்.

பழங்குடியின அமைச்சர் Ken Wyatt இதே வரலாற்று மன்னிப்பை கோரினார். அவர் கூறும்போது, தானும் அந்த மக்களின் ஒருவன் என்றும், இன்னும் சமமாக நடத்தப்படவில்லை என்பது இன்னும் பரவலாக இருப்பதாகவும், எங்கள் சமூகங்களில் நிறைய தீமைகள்,எங்களுடைய மக்களின் போராட்டங்கள் கேட்கப்பட வேண்டும். இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் கூறினார்.

மன்னிப்பு கேட்டதிலிருந்து ஒவ்வொரு வருடமும், பிரதமர் பாராளுமன்றத்தில் நிறைவு இடைவெளி அறிக்கையை அறிவிப்பார். கடந்த ஆண்டு இந்த இடைவெளி அறிக்கையை புதுப்பிக்க எண்ணியது. அந்த அறிக்கை ஜூலையில் வெளியாகும். திங்களன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இன்னும் பழங்குடியினருக்கு தங்களின் முடிவு மற்றும் கொள்கையில் செல்வாக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் தலைவர் Anthony Albanese திங்களன்று நல்லிணக்கத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உலுரு அறிக்கையின் பரிந்துரையை ஏற்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த பிரச்னையை தொடராமல் அதற்கான வழியைத் தேடி அலையாமல் முன்னேற்றத்திற்கான வழியை நோக்கி செல்வோம். உலுரு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பாக மாற்ற குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு பழங்குடி ஆஸ்திரேலியர்களின் கருத்துக்களை ஏற்கிறோம் என்று கூறியது.

Linda Burneyபழங்குடி ஆஸ்திரேலியர்களின் Labor’s spokesperson Linda Burney கூறுகையில், உலுரு அறிக்கை தோன்றி மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் அது நிலுவையில் உள்ளது. உண்மையான வளர்ச்சியை பார்க்க வேண்டுமானால் முதலில் நாட்டு மக்களை தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கூறினார்.