Breaking News

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் !

Victorian Premier Daniel Andrews 17

விக்டோரியா நாளை ஐந்தாம்நாள் ஊரடங்கின் முடிவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தக்க பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4ஆம் நாள் ஊரடங்கில் விக்டோரியாவில் இரண்டு புதிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று நடந்த 24,000 சோதனைகளிலிருந்து இந்த இரண்டு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மாநிலத் முதல்வர் Daniel Andrews கூறினார்.

Intensity of security arrangements taken to prevent the spread of corona virusமேலும் இது குறித்து அவர் கூறுகையில், அந்த இரண்டு தொற்றும் ஏற்கனவே கூறப்பட்ட Holiday Inn தொடர்புடைய 19 தொற்றுடன் சம்பந்தப்பட்டது. இந்த இரண்டு தொற்றும் சுகாதார ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தொற்றினால் எந்த ஒரு புதிய தொற்றும் ஏற்படவில்லை. இதே போன்று மேலும் இரண்டு தொற்றுகள் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஏற்பட்டு மொத்தம் 25 தொற்றுகள் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளன என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஊரடங்கு தொற்று பரவாமல் தடுத்துள்ளது. ஆனால் இது புதன்கிழமை முடிவு பெறுமா என்பதை உறுதியாக கூறவில்லை. இந்த யோசனை வேலை செய்கிறது. இதில் மாற்றம் இருந்தால் நாளை இரவு கூறுவதாகவும், தொற்று குறைந்த அளவே உள்ளது.ஆனால் இதே நிலை நீடிக்குமா என்பதை நாளை வரை கூற முடியாது.

மேலும் விக்டோரியாவில் பழைய தடைகள் இருக்குமா அல்லது சில தடைகள் சில இடங்களில் நடைமுறையில் இருக்குமா என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த விதிமுறைகளை எவ்வளவு சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம். வியாழக்கிழமை வரை விமானங்கள் இயங்காது என்று உறுதியாக கூறினார். இதைப் பற்றிய அறிவிப்புகள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.