கோவிட் 19 தடுப்பூசிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்டோரில் மிக அபூர்வமாக சிலருக்கு ரத்தம் உறைதல் புகார்கள் எழுந்துள்ளன. ரத்தம் உறைதல் என்பது என்ன? அதனை எப்படி கண்டறிவது என மருத்துவக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
பொதுவாக உடலில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காயம் காரணமாக ரத்தம் உறைதல் என்பது ஏற்படும். தட்டணுக்கள் உயிர்பெற்று சிதைந்த ரத்தக்குழாயின் சுவர்களை அடைத்துக் கொள்ளும் போது அது ரத்தம் வெளியேறுவதை முழுவதுமாக தடுத்து நிறுத்துகிறது. தட்டணுக்கள் ஏற்கனவே ரத்தத்தில் உள்ள காரணிகளோடு இணைந்து செயல்படத் தொடங்கும். அவை இணைந்து காயம் ஏற்படும் போது அதை தடுக்கும் பைப்ரின் என்ற வலுவா உறை வலையை உருவாக்குகின்றன.
ரத்தம் உறைதலை உருவாக்கும் காரணிகளில் சில ரத்தம் உறைதல் அதிகமாக ஏற்படும் போதே உடலில் மற்ற பாகங்களுக்கு ரத்தக் கட்டிகள் நகரக்கூடும் என்று அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ரத்த ஆராய்ச்சியாளர் டான் தாமஸ் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக ரத்தம் உறைதலில் கால்களில் ஏற்படும் வீக்கம், உடலில் ஏற்படும் வலி, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம், மிக வேகமாக மூச்சு விடும் போது ஏற்படும் வலி ஆகியவை அறிகுறிகள் என்றும் டாக்டர் டான் தாமஸ் குறிப்பிடுகிறார்.
ஆனால், கொரொனா தடுப்பூசி எடுத்த பின்னர் ஏற்படும் ரத்தம் உறைதலுக்கும், சாதாரணமாக காயம் காரணமாக ஏற்படும் ரத்தம் உறைதலுக்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய அறிகுறிகள் என்ன ?
தடுப்பூசி எடுத்துக் கொண்ட 4 லிருந்து 20 நாட்களுக்கு பிறகு குடல் நாளத்தில் ஏற்படும் கடுமையான வலி.
பாராசிடமல் போன்ற மாத்திரைகளுக்கு சரியாகாத தொடர்ச்சியான தலைவலி.
நான்கு நாட்களுக்கு பிறகு உடலில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான உபாதைகள்.
- வலிப்பு அல்லது வாந்தி
- மயக்கநிலை
- பேச்சு வராமல் போகுதல் அல்லது குழறுதல்
- உடலின் ஒருபுற செயல்பாடு குறைதல்
- குழப்ப நிலை
- பார்வைக் குறைபாடு
உடலில் செலுத்தப்படும் ஆன்டி பாணி மருந்துகள் தட்டணுக்களை தூண்டி விடுவதன் மூலம் மிக ஆபூர்வமாக நிகழும் உடல் எதிர்ப்பு நிகழ்வு சில வைரஸ் கிருமிகளையும், தடுப்பூசி மருந்துகளையும் அருகாமையில் செல்ல விடாமல் தடுத்தது.
மேலும், கோவிட் மூலம் பாதிக்கப்படுவோர், அஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக் கொள்வோர் ரத்தம் உறைதலை தடுத்து ரத்தத்தை இலகுவாக்கும் Herapin மருந்தை எடுத்துக் கொள்வதாக டாக்டர். தாமஸ் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர் கவலையுறும் நபர்கள் ரத்தம் உறைதலுக்கு ஆளாவதாக பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியாவில் அஸ்ட்ராசெனகா எடுத்துக்கொண்ட இருவருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம், ஆஸ்திரேலியாவில் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.