Breaking News

லிப்ரல் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் விக்டோரியா மாகாண மக்களவை உறுப்பினர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

The member of the Provincial Council of Victoria has been relieved of all positions, including basic party responsibilities, based on votes cast by Liberal Party members.

இம்மாத தொடக்கத்தில் ஃபேஸ்புக்கில் கருக்கலைப்பு குறித்து சர்ச்சை அளிக்கும் விதமான கருத்தை பதிவிட்டு இருந்தார் பெர்னி ஃபின். அதற்கு உட்கட்சியில் மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது. தேர்தல் நேரத்தில் பெர்னின் ஃபினின் நடவடிக்கை விமர்சினத்திற்குள்ளானது.

அதையடுத்து பெர்னி ஃபின் நாடாளுமன்றத்தில் லிப்ரல் கட்சியின் கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பொதுத் தேர்தலில் லிப்ரல் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதையடுத்து கட்சியினரிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

The member of the Provincial Council of Victoria has been relieved of all positions, including basic party responsibilities, based on votes cast by Liberal Party members..அதில் பலரும் மக்களவை உறுப்பினர் பெர்னி ஃபின்னை கட்சியில் இருந்து நீக்கும்படி வாக்களித்தனர். இதையடுத்து லிப்ரல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விக்டோரியா நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், லிப்ரல் கட்சியின் ஜனநாயகம் இல்லை. சொந்த கருத்துக்கு மதிப்பில்லை. 41 ஆண்டுகளாக இந்த கட்சியில் இருந்தேன். ஆனால் இப்போது கருத்துச் சுதந்திரம் இல்லை. பதவியில் இருந்துகொண்டே மக்களவையில் போராடினேன். தற்போது அதற்கு வெளியெ இருந்துகொண்டு போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவைக்கு வெளியே வந்த விக்டோரியா மாகாண முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸிடம் கேள்வி எழுப்பபப்ட்டது. அப்போது பேசிய அவர், ஃபினின் ஆதரவாளர்களுக்கு கட்சியில் அவருடைய இருப்பு அவசியமாக தெரிகிறது. அந்த பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறி புறப்பட்டார்.