Breaking News

ஊரகப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், அங்குள்ள பள்ளிகள் பலவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறிவருவது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

As there is a shortage of teachers in rural schools, the shift of many schools there to online classes has caused concern among educators.

ஆஸ்திரேலியாவின் ஊரக மற்றும் கிராமபப் புற பள்ளிகளில் கடுமையாக ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக மொழிப் பாடங்கள், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களுக்கு ஆசிரியர்கள் கிடைப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.

As there is a shortage of teachers in rural schools, the shift of many schools there to online classes has caused concern among educatorsவிக்டோரியா மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் உள்ள 14 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2020-ம் ஆண்டு முதல் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. நடப்பாண்டு ஜனவரியில் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான இறுதியாண்டு மாணவிகளுக்கு பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. மேலும் ஊரகப் பகுதிகள் கிராமங்களிலுள்ள பள்ளிகளில் வகுப்பெடுக்க பலரும் முன்வருவதில்லை. குறிப்பாக படித்து முடித்து ஆசிரியர் பணிகளுக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையினர் பலர் இதுபோன்ற் பகுதிகளை விரும்புவது கிடையாது என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் பேராசியரான டோனா கிங், ஊரகப் பகுதிகளில் சிறப்பு அனுமதி பெற்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எங்களுடைய பல்கலைக்கழகம் நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பலரும் பெருநகரங்களை தேர்வு செய்கின்றனர் என்று கூறினார்.