Breaking News

ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் வீடு கட்ட திட்டமிடுபவர்கள் அல்லது வாங்குவோர் தங்களுடைய ஓய்வுகாலச் சேமிப்பு நிதியில் இருந்து ஒரு பகுதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என லிப்ரல் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

The Liberal Party has promised that first-time home planners or buyers in Australia will be able to take advantage of a portion of their retirement savings fund.

வரும் 20-ம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இளம் வாக்காளர்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. தற்போது கிடைத்திருக்கக் கூடிய தகவலின் படி, தற்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் தேர்தல் கணிப்புகளில் பின் தங்கியுள்ளார்.

The Liberal Party has promised that first-time home planners or buyers in Australia will be able to take advantage of a portion of their retirement savings fundமீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் புதிய வீட்டுத் திட்டத்தை முன்வைத்து பரப்புரை செய்து வருகிறார். இதுதொடர்பாக சேனல் 7-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ஓய்வுக்காலச் சேமிப்பில் இருந்து முதன்முறையாக வீடு வாங்குவோர் பணம் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் நிலத்தின் மதிப்பு அதிகரிக்காது. இந்த புதிய திட்டத்தின் மூலம் முதன்முறையாக வீடு வாங்கும் பல பயன்பெறுவார்கள் என்று கூறினார். எனினும் இது அவருடைய தேர்தல் வெற்றிக்கு பயன் தருமா என்பது தெரியவில்லை. தங்களுடைய ஓய்வுக்கால சேமிப்பு நிதியில் இருந்து முதன்முறையாக வீடு வாங்குவோர் 50 ஆயிரம் டாலர்கள் வரை பெற்றுக் கொள்ளலாம் என லிப்ரக் கட்சி தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.