Breaking News

கொரோனா செலுத்திக் கொண்ட 77 வயது மூதாட்டி கடந்தாண்டு இறந்துபோன நிலையில், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசியை முழுமையாக நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

A 77-year-old woman who was vaccinated against corona has died last year, but her family says they fully believe in the vaccine.

மெல்பேர்னைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி ராபின், கடந்தாண்டு ஜூலை மாதம் ஆஸ்ட்ராஜெனகாவின் கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார். சில வாரங்களில் அவருக்கு மனபிரம்பை ஏற்பட்டுள்ளது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், 2021 செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

A 77-year-old woman who was vaccinated against corona has died last year, but her family says they fully believe in the vaccineஅவருடைய மறைவை அடுத்து வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழில் மூதாட்டி ராபின், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் காரணமாகவே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராபின் மறைவு தொடர்பாக மருத்துவத்துறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கடந்த 8 மே 2022 வரை 58 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி காரணமாக 11 பேர் மரணமடைந்துள்ளதை அந்த நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ஆஸ்ட்ராஜெனிகாவின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இறந்துபோன ராபின் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் அவருடைய மனநிலை சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற மாற்றங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு நடந்துள்ளது.

A 77-year-old woman who was vaccinated against corona has died last year, but her family says they fully believe in the vaccine,மருத்துவ உலகில் இது ஜி.பி.எஸ் குறைபாடு என்று கூறப்படுகிறது. அதாவது Guillain-Barre syndrome என்பதன் சுருக்கமே ஜி.பி.எஸ். இதுவொரு தன்னதிர்ப்பு நோய், புற நரம்புகளைத் தாக்கப்படுவதால் காலப்போக்கில் உங்களுக்கு பலவீனம் மற்றும் சில கூச்ச உணர்வு மற்றும் உணர்வு இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். கைகளையும் கால்களையும் அசைக்க முடியாமல் போய், இறுதியாக உங்கள் நுரையீறலை பாதிக்கும். இதன்காரணமாகவே தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்ட்களில் ராபின் உயிரிழந்துவிட்டார். எனினும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். பல்வேறு தடைகள் இருந்தாலும் தடுப்பூசி திட்டத்தில் தனக்கு நம்பிக்கையுள்ளது, அதன்காரணமாகவே அதை நாங்கள் எடுத்துக் கொண்டோம் என ராபினின் மகன் ராஸ் தெரிவித்துள்ளார்.