Breaking News

பொதுத் துறைக்கு செலவிடப்படும் நிதியை குறைப்பதன் மூலம் செயல்திறனுக்கு வாய்ப்புள்ள துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று லிப்ரல் கட்சி தெரிவித்துள்ளது.

The Liberal Party has said that by reducing funding for the public sector, it is likely to increase revenue by focusing on potential sectors.

கடந்த 1987-ம் ஆண்டு லேபர் கட்சி ஆட்சியில் இருந்த போது அப்போதைய அரசு செயல்திறனுக்கு வாய்ப்புள்ள துறைகளுக்கு முன்னுரிமை அளித்தது. இதனால் பொதுத்துறைக்கான வருவாய் பாதிக்கப்பட்டது.

இதே திட்டத்தை தற்போது லிப்ரல் கட்சியும் தன்னுடைய தேர்தல் கொள்கைகளில் அறிவித்துள்ள்ளது. பொதுத் துறைக்கான திட்ட மானியங்களை குறைப்பதன் மூலம் செயல்திறன் மிக்க துறைகள் மூலம் 2 பில்லியன் வரை வருமானமீட்ட முடியும் என லிப்ரல் கட்சி பொருளாளர் ஜோஷ் ஃபிரைடென்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தின் போது கூட்டணி அறிவித்த ஒவ்வொரு கொள்கையின் விலையையும் செயல்திறன் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள தொகை ஈடுசெய்யும். மேலும் நாட்டின் நிதியாண்டுக்கான பட்ஜெட் விபரங்களும் வளர்ச்சி அடையும் என்று கூறினார்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலியா பல்வேறு துறைகள் மூலம் 104 பில்லியன் டாலர் வளர்ச்சியை குவிக்கும். இதை மக்கள் கண்கூடாக பார்ப்பார்கள் என்று தெரிவித்தார். ஆளும் லிப்ரல் கட்சி நிதி கொள்கைகளை வெளியிட்டதை அடுத்து, எதிர்க்கட்சியான லேபர் பார்டிக்கு இது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.