Breaking News

மக்களின் வாக்குகளை கணக்கிடுவதற்கு லேபர் மற்றும் லிப்ரல் கட்சிகள் தனிப்பட்ட வகையில் தங்களுக்கு என்று மென்பொருட்களை தயாரித்து வைத்துள்ளன.

The Labor and Liberal parties have personally developed software that counts the votes of the people.

வரும் 20-ம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அளிக்கவுள்ள வாக்குகளை கணக்கிடுவதற்கு லேபர் மற்றும் லிப்ரல் கட்சி தனித்தனியாக ஒரு மென்பொருட்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

The Labor and Liberal parties have personally developed software that counts the votes of the peopleகியூன்லாந்து பல்கலைக்கழக்த்தின் கெல் கெல்போர்டு என்பவர் மக்களிடம் பேசி இரண்டு கட்சிகளுக்குமான ஆதரவு நிலைபாடுகளை தரவாக தயாரித்து வைத்துள்ளார். அதன்வழியாக இரண்டு கட்சிகளும் ஒரு தரவினை பிரித்தெடுத்து இந்த மென்பொருளினை தயாரித்துள்ளன. லேபர் கட்சி வைத்துள்ள மென்பொருளின் பெயர் ‘கேம்பையின் செண்ட்ரல்’. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு பதிவாகும் போது, குறிப்பிட்ட மணி நேரத்தில் தங்களுக்கு கிடைத்துள்ள வாக்குகளின் எண்ணிக்கையை பூத் ஏஜெண்டுகளிடம் இருந்து லேபர் கட்சி பெற்றுக் கொள்ளும்.

அந்த தகவல்களை மென்பொருளில் ஏற்றப்பட்டுள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு வெற்றி வாய்ப்பை கணிக்கும். இதே நிலைபாடுடன் தான் லிப்ரல் கட்சியின் மென்பொருளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதும் வெளியாகாது என ஏற்கனவே ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.