Breaking News

ஆள்மாறாட்டம் மூலம் 260,000 டாலர் பணத்தை மோசடி செய்த பெண்ணை நன்னடத்தை காரணமாக விக்டோரியா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது

Victorian court acquits woman for embezzling $ 260,000

ஃப்லீட்பிளஸ் என்கிற கடற்படை மேலாண்மை நிறுவனத்தின் பணியாற்றி வந்தவர் கால்வின் – சாமி (35). இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தனது நிறுவனத்தின் மெல்பேர்ன் கிளைக்கு சென்றிருந்த போது, அங்குள்ள சில ஆவணங்களை திருடியுள்ளார்.

அதன்மூலமாக பல பேருடைய பேரில் ஆவணங்களை தயார் செய்து, பல்வேறு வங்கிகளில் இருந்து கடன் பெற்று வந்துள்ளார். இந்த குற்றம் தொடர்பாக கடந்த ஜூன் 2019-ம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான விசாரணை விக்டோரியா நீதிமன்றத்தில் நடந்தபோது, அவர் போதை பழக்கத்துக்கு அடிமையானது தெரியவந்தது. உடனடியாக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு நீதிமன்றம் முன்பு தன்னுடைய நடவடிக்கைக்கு அவர் மன்னிப்பு கோரினார்.

மேலும் தான் செய்த மோசடி சம்பவங்களால், மனம் வருந்துவதாகவும், என்னுடைய மீது வாழ்நாளை குற்ற உணர்வுடன் கழிக்க வேண்டும் என்று நினைக்கும் நெஞ்சும் குமுறுவதாகவும் அவர் தன்னுடைய கடித்தத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கால்வின் – சாமி மோசடி வழக்கை விசாரித்து வந்த மைக்கேல் மெக்நெலே தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி மறுவாழ்வு மையத்தில் நன்னடத்தை சான்றிதழ் பெற்று கால்வின் தனது போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதை கருத்தில் கொண்ட நீதிமன்றம் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. மேலும் குற்றவாள் கால்வின் மோசடி வழியில் சம்பாதித்த பணத்தையும் மீட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.