Breaking News

பரமாரிப்பு காரணமாக எரிவாயு விநியோக்கும் பணியை நிறுத்திய ரஷ்யா..!!

ரஷ்யா - ஜெர்மனிக்கு இடையே அமைந்துள்ள ஒற்றை எரிவாயு குழாய்க்கான பராமரிப்பு பணிகள் போர் காரணமாக திட்டமிட்டபடி 10 நாட்களில் நிறைவடையாது என்று தெரியவந்துள்ளது நிறுவனங்களுக்கு கவலை அளித்துள்ளது.

Russia halts gas supply due to transfer

பால்டிக் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள ஒற்றை குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதன் வாயிலாக ஆண்டு ஒன்றுக்கு 55 பில்லியன் கியூப்பிக் எரிவாயு கடத்தப்படுகிறது. வரும் ஜூலை 11 முதல் 21-ம் தேதி இந்த குழாய் வழித்திடத்தில் ரஷ்யா பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.

இதனால் ஜெர்மனிக்கான எரிவாயு போக்குவரத்தை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகளுக்கான கால அளவு, திட்டமிட்டப்பட்டுள்ளதை விட மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Russia halts gas supply due to transfer,ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிவாயுக்களை, ஜெர்மனி பல்வேறு ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விநியோகிக்கிறது. இதனால் எரிவாயுவை பெறும் பன்நாட்டு நிறுவனங்களிடையே பதற்றம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிடத்தை நிரம்ப அமெரிக்கா, பரகுவே போன்ற நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன. ரஷ்யாவிடம் எரிவாயுவை பெற்றுவந்த நிறுவனங்களுக்கு, தற்காலிகமாக 15 கியூப்பிக் மீட்டர் அளவு எரிவாயுவை அனுப்ப அமெரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை பெறும் ஜெர்மனியிடம் முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே போதிய இருப்பு உள்ளது.

அதனால் பரமாரிப்பு பணிகள் திட்டமிட்ட நாட்களை கடந்து போனாலும், சமாளிக்கும் திறன் உள்ளது. எனினும் நிறுவனங்கள் அச்சப்படும் விதமாக போர் காரணமாக பராமரிப்பு பணிகள் நீளும் பட்சத்தில், வேறு நிறுவனங்களை நாட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.