Breaking News

ஆஸ்திரேலியாவின் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு கிம்பா அருகே அமைய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The government has said that Australia's access storage depot is likely to be located near Kimba.

ஆஸ்திரேலியாவின் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கை அமைக்க கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வந்தது.

இது குறித்து பேட்டியளித்த மத்திய வளங்கள் துறை அமைச்சர் கேய்த் பிட், ஆஸ்திரேலியாவின் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு தெற்கு ஆஸ்திரேலியாவின், கிம்பா அருகே அமைந்துள்ள நபாண்டீ பகுதியில் அமைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

The government has said that Australia's access storage depot is likely to be located near Kimba..அரசின் இந்த முடிவு குறித்து வரும் 60 நாட்களில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்படும் என்றும், அமைச்சர் பிட் தெரிவித்துள்ளார். கிம்பாவில் சேமிப்பு கிடங்கு அமைப்பது என்ற கொள்கை முடிவை அரசு எட்டியிருந்தாலும், கடந்த 6 ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட பல்வேறு சட்ட திருத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல மக்களுக்கு வாய்ப்புள்ளது. கிம்பா உட்பட மேலும் 3 இடங்களை அரசு தேர்வு செய்துள்ளதாகவும் அமைச்சர் பிட் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசின் இந்த முடிவு குறித்து தங்களுடன் ஆலோசிக்க வில்லை என்று பார்ன்கார்லா மக்கள் தெரிவித்துள்ளனர்.

The government has said that Australia's access storage depot is likely to be located near Kimbaஒரு தரப்பினரிடம் மட்டுமே அரசு கருத்து கேட்டுள்ளதாகவும் , தங்களுக்கான வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டதாக பார்னலா பூர்வக்குடி கழகம் தெரிவித்துள்ளது. நப்பாண்டீயை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் , நீதிமன்றதை நாடவுள்ளதாகவும் பூர்வக்குடிகள் தெரிவித்துள்ளனர். அணுக்கழிவு ஆஸ்திரேலியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3yMEdRM