Breaking News

சீனாவில் மூன்று குழந்தைகள் திட்டத்திற்கு ஆதரவு திரட்ட புதிய முயற்சி : பலருக்கு இந்த திட்டம் ஏற்புடையது அல்ல

New attempt to mobilize support for the Three Children program in China. This project is not suitable for many

சீனாவின் இரண்டு குழந்தைகள் திட்டத்தில் இருந்து மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இந்தத் திட்டத்தை மக்களிடையே அதிக அளவில் கொண்டு சேர்ப்பதற்காக 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம் குறித்த ஸ்லோகன்களை பெற்றோர்களே தயாரித்து கொடுக்கலாம் என்றும் அதற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஓவியத்திற்கு பரிசும் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

New attempt to mobilize support for the Three Children program in China. This project is not suitable for many.அதே நேரத்தில் சீனாவில் இந்த மூன்று குழந்தைகள் திட்டம் அரசின் அறிவிப்புக்கு பின்னர் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், பெருவாரியான பெற்றோர்களால் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதலே இந்த திட்டம் கொள்கை முடிவாக எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதற்குரிய போதுமான நபர்களை முழுமையாக சென்றடையவில்லை என்றும் அவர்களுக்கு பணி உத்தரவாதம் என்றும் கூறுகறார்கள்.

மூன்று குழந்தைகள் திட்டத்தை வலியுறுத்தும் விதமாக ஏராளமான புதிய யோசனை களுடன் கூடிய வித்தியாசமான ஸ்லோகன்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீனாவின் பெய்ஜிங்கில் இந்த மூன்று குழந்தைகள் திட்டத்திற்கு ஏராளமான பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

New attempt to mobilize support for the Three Children program in China. This project is not suitable for many,.ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சராசரியாக 1 அல்லது 2 குழந்தைகளுடன் தங்கள் குடும்பத்தை நிரூபிப்பதற்கு போதுமான பணம் இன்றி தவித்து வருவதாகவும் இதில் மூன்று குழந்தைகள் எனும் பட்சத்தில் அவர்களுடைய அத்தியாவசிய குடும்பத் தேவைகள் அதிகரிக்கும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மூன்று குழந்தைகள் திட்டத்தை விளம்பர படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ள இந்த ஸ்லோகங்கள் தங்களை கவரவில்லை என்றும் மாறாக அது தங்களுக்கான புதிய அழுத்தமாக உணர படுவதாகவும் கூறியுள்ளார் பிள்ளையை தனியே வளர்க்கும் ஒருமைப் பெற்றோர்.

Link Source: https://ab.co/3ySKJGm