Breaking News

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு சமூகத்தினரை குறிவைக்கும் டெல்டா வகை வைரஸ் : நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில் மருத்துவர்கள் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாகாணங்களில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸின் தீவிர பாதிப்பால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், டெல்டா வகை வைரஸ் பாதிப்பு ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசங்களில் இருக்கக்கூடிய சொந்த நாட்டை சேர்ந்த மக்களை அதிகளவில் பாதித்து வருவதாகவும் அதே நேரத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் நாட்களில் உயிரிழப்புகளை தடுப்பதற்கு அடுத்த 7 மாதங்களுக்கு உள்ளாக மத்திய ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய மருத்துவ காங்கிரஸ் தலைவர் டாக்டர் John Boffa தெரிவித்துள்ளார்.

Delta virus targeting indigenous communities in Australia. Doctors warn as more than 100 continue to die.மதிய ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை வைரஸின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், உள் நாட்டை சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் வரை உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் டாக்டர் John Boffa எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆல்பா வகை வைரஸ் எப்படி அமெரிக்காவின் Navajo சமூகத்தை குறிவைத்து தாக்கி அவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கியதோ அதேபோன்று டெல்டா வகை வைரஸ் மத்திய ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களை குறி வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Delta virus targeting indigenous communities in Australia. Doctors warn as more than 100 continue to die..வடக்கு பிரதேசங்கள் மற்றும் மத்திய ஆஸ்திரேலியாவில் தொற்று பரவல் அதிகரிக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும், விரைந்து நடவடிக்கை எடுத்து தடுப்பூசிகளை போடும் பட்சத்தில் பெருமளவு பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இதற்கு முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இது போன்று உள்நாட்டு சமூகத்தை அதிகளவில் குறிவைத்து தாக்கும் வைரஸ் பாதிப்புகளின் வரலாறு நம்மிடம் இருப்பதால் அதனை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் John Boffa எச்சரித்துள்ளார்.

உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் வைரஸ் பாதிப்பு தொடர்பான ஆய்வுகளில் உள்நாட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும், இனிவரும் காலங்களில் அந்த முடிவுகள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Link Source: https://ab.co/2Ue4adT