Breaking News

வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஹெல்ஸ் கேட்ஸ் அணையை கட்டுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

The federal government has allocated $ 5.4 billion to build the Hells Gates Dam in northern Queensland.

துணை பிரதமர் பார்னாபி ஜாயிஸ் வெளியிட்ட உத்தரவின் படி அணை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. இதுகுறித்து நீர் மேலாண்மை சார்ந்த துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர், ஹெல்ஸ் கேட்ஸ் அணை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் குடிநீராக அது இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

The federal government has allocated $ 5.4 billion to build the Hells Gates Dam in northern Queensland..அணை கட்டி முடிக்கப்பட்டு மத்திய அரசு நிதி மீட்பு கொள்கைகளை வகுத்தால், நிச்சயம் இது ஆஸ்திரேலியாவின் அதிக விலை உயர்ந்த குடிநீராக அடையாளப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு ஹெல்ஸ் கேட்ஸ் அணையில் இருந்து நீர் பெறுவதற்கு கட்டணம் வசூலித்தால், பொதுமக்களை விடவும் விவசாயிகள் அதிக பாதிப்புகளைச் சந்திப்பார்கள் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை பிரதமர் பார்னாபி ஜாயிஸ், அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கொள்கைகளுக்கு பெரியளவில் மதிப்புக் கொடுக்கபோவதில்லை. மாறாக, விவசாயிகளுக்கு இலவசமாக அணையில் இருந்து நீர் திறந்தவிடப்படும் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை நினைவில் வைத்து, துணை பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

கியூன்ஸ்லாந்து மாகாணத்தில் இருக்கும் அணைகளில் மிகவும் பெரிய அணையாக ஹெல்ஸ் கேட்ஸ் அணை அமையவுள்ளது. சுமார் 2100 ஜிகா லிட்ட நீர் இருப்பு கொண்டதாக கட்டமைக்கப்படுகிறது. இதன்மூலம் 60 ஆயிரம் ஹெக்டேர்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.