Breaking News

காதலியை தீயிட்டு கொளுத்த முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட காதலனின் மனநிலையை ஆராய்ந்து தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The court said the details of the sentence would be announced after examining the mental state of the boyfriend who was arrested for the crime of attempting to set his girlfriend on fire.

கடந்த ஆகஸ்டு 23, 2020-ம் தேதி டேனியல் போல்டுசன் என்கிற நபர், தன்னுடைய காதலி ஆண்ட்ரியா அட்கின்ஸ்-க்ரீட் (26) மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். சூடு பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

The court said the details of the sentence would be announced after examining the mental state of the boyfriend who was arrested for the crime of attempting to set his girlfriend on fireசுமார் 35 சதவீதம் தீயக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஆண்ட்ரியா பல நாட்கள் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த டேனியல் போல்டுசனை காவல்துறை கைது செய்தது. அதை தொடர்ந்து உயிர் பிழைத்த அவர், போலீசாரிடம் காதலன் தீயிட்டு கொளுத்த முயன்றதை உறுதி செய்து வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வந்தது. ஆண்ட்ரியா மற்றும் டேனியல் போல்டுசனின் இருதரப்பு வாதங்களையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முடிவாக நடைபெற்ற விசாரணையின் போது ஹைக்கா சிறைச்சாலையில் இருந்து கானொலி காட்சி மூலம் டேனியல் போல்டுசன் பங்கேற்றார். அப்போது காதலி ஆண்ட்ரியாவை தீயிட்டு கொளுத்த முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்னதாக குற்றவாளியின் மனநிலையை ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு நீதிபதி ஆண்ட்ரூ ஸ்டாவ்ரினாவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை தொடர்ந்து ஜூலை மாதத்தில் குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை அறிவிகப்படும் என்று தெரிவித்துள்ளார்.