Breaking News

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெய் ஹிண்ட்லீ (26) சாம்பியன் பட்டம் வென்றார்.

Jai Hindley (26) of Australia wins the International Cycling Championships in Italy.

உலகளவில் நடைபெறும் சைக்கிள் பந்தயப் போட்டியில் இத்தாலி நடக்கும் கிரோ டீ இத்தாலியாவுக்கு மிகப்பெரியளவில் ரசிகர் வட்டம் உண்டு. இந்தாண்டுக்கான போட்டி இத்தாலியில் வடக்கிழக்குப் பகுதியான வெர்னோவில் நடைபெற்றது.

Jai Hindley (26) of Australia wins the International Cycling Championships in Italyஇதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தைச் சேர்ந்த ஜெய் ஹிண்ட்லீ 17.4 கிலோ மீட்டர் தூரத்தை 86 மணிநேரம் 31 நிமிடங்கள் 14 நொடிகள் கடந்து சாதனை படைத்தார். அவருக்கு கிரோ டீ இத்தாலியா கோப்பை வழங்கப்பட்டது. இதன்மூலம் சர்வதேச சைக்கிள் போட்டியில் கிராண்டு டூர் பட்டத்தை வெல்லும் இரண்டாவது ஆஸ்திரேலியர் என்கிற பெருமை ஜெய் ஹிண்ட்லீக்கு கிடைத்துள்ளது. அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பஹ்ரைனைச் சேர்ந்த ரிச்சர்டு கார்பஸ், மூன்றாவது இடத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் லந்தா உள்ளிட்டோர் கைப்பற்றினர்.