Breaking News

கொலரோடா காட்டு தீயில் 1600 ஏக்கர் வனப்பகுதியும், 500 வீடுகளும் முற்றிலும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Colorado wildfire is reported to have completely destroyed 1600 acres of forest and 500 homes..

கொலரோடா வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மின் மாற்றியில் இருந்து வந்த தீ பொறி பட்டதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

The Colorado wildfire is reported to have completely destroyed 1600 acres of forest and 500 homes. முழுமையாக வறண்ட பிரதேசமாக காணப்படும் இப்பகுதியில் காட்டுப்புற்கள் காய்ந்த நிலையில் இருந்ததால் மிக எளிதாக தீ பரவத்தொடங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் ஜார்ட் பொலீஸ், கால்பந்தாட்ட அளவுள்ள இடத்தை ஒரு சில நிமிடங்களிலேயே இந்த காட்டு தீ அழித்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த காட்டுத்தீயின் கோர பிடியில் சிக்கி சுமார் 500 வீடுகள் முற்றிலும் எரிந்துள்ளதாகவும், 12 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுப்பீரியர் நகரம், கொலரோடா வில் வசித்த சுமார் 18000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அவசர கால உதவிக்குழு தெரிவித்துள்ளது.

ஏராளமான வீடுகளுடன், வர்த்தக கட்டடங்களும், வாகனங்களும் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் இந்த தீ விபத்தில் இருந்து மக்களை காப்பதே பிரதானம் என்றும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/34fxgOE