Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் சமூக பரவல் மூலமாக ஒருவருக்கு தொற்று பாதிப்பு : மேலும் தொடர்பில் இருந்த 24 பேரை கண்காணித்து பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு

Infection per person through social outbreak in Western Australia. Department of Health decides to monitor and test 24 more people in contact

இதனையடுத்து சமூக பரவல் மூலமாக தோற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது . விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நபருக்கு சமூக பரவல் மூலமாக தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்காணிப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகவும், மேலும் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan தெரிவித்துள்ளார்.

Infection per person through social outbreak in Western Australia. Department of Health decides to monitor and test 24 more people in contact.பெர்த் மற்றும் வாகனத்தின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த பகுதிகளில் தொற்று பரவல் மையங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்கள் அதிகாரப்பூர்வ சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் பிரீமியர் கூறியுள்ளார். தொற்று பாதிப்பு பதிவாகாத இடங்களில் முதன்முறையாக பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் Mark McGowan குறிப்பிட்டுள்ளார்.

South Bunbury, Fremantle, Preston Beach, South Fremantle, Perth, மற்றும் Kardinya ஆகிய பகுதிகள் புதிய தொடர் பரவல் மையங்களாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இங்கு சென்று வந்த நபர்கள் தங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை மேற் கொள்ளுமாறும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தென்மேற்குப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Infection per person through social outbreak in Western Australia. Department of Health decides to monitor and test 24 more people in contact..அதே நேரத்தில் தற்போது தொற்று பாதிப்பில் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 24 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு இன்னும் பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்கள் சென்று வந்த பகுதிகள் தொற்று பரவல் மையங்களாக கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகளில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களுக்கு தொற்று பாதித்தால் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் ஆயிரத்துக்கும் மேலாக இருப்பதாகவும், அதில் நெருங்கிய தொடர்புகளை கண்காணிப்பதில் உள்ள சிக்கல்களை களையும் வகையில் உரிய நடவடிக்கைகள் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3EL8ZN4