Breaking News

தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்திற்கு சென்ற நிலையில் அது வலுவிழக்கும் என தகவல் : கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த தென் ஆப்ரிக்கா அரசு முடிவு

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து அதனுடனான கடுமையான போராட்டத்தில் இருந்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு முதலில் தொடங்கிய தென்னாப்பிரிக்காவில் அது உச்சத்திற்குச் சென்று இறுதி நிலையை அடைந்திருப்பதாக தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மைக்ரான் பாதிப்பு அதன் உச்சகட்டத்தை அடைந்து படிப் படியாக வலுவிழக்கும் என்று கூறப்படுகிறது.

South Africa's decision to ease covid restrictions1தென்னாப்பிரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் நான்காவது முறையாக ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்த நிலையில் அது உச்சத்திற்கு சென்று தற்போது பாதிப்பின் அளவு குறைந்துவிட்டதாகவும், இதனையடுத்து இரவில் இருந்து அதிகாலை நான்கு மணிவரை போடப்பட்டிருந்த நள்ளிரவு ஊரடங்கு தளர்த்தப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கும் பகுதிகளின் அடிப்படையில் அங்கு தளர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்றும், ஐந்து கட்ட எச்சரிக்கைகளின் அடிப்படியிலும் தளர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் Mondli Gungubele கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு நான்காவது அலையாக வந்த நிலையில் அது உச்சத்தை எட்டி தற்போது பாதிப்பின் அளவு குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. வைரஸ் திரிபு பரவல் வேகத்தின் அடிப்படையில் முடிவுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

3.5 மில்லியன் பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நிலையில் 91 ஆயிரம் பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாகாணங்கள் அங்கு உள்ள பாதிப்பு எண்ணிக்கை, தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் பரவலாக தளர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3eHHF7H