Breaking News

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

The Central Health Department has said that the 2nd wave of corona in India is not over yet.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் முழுவதும் கொரோனா 2ம் ஆலை பாதிப்பு மற்றும் பலி, கடந்த ஒரு மாதமாக குறைந்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளன.

100% பணியாளர்களுடன் தொழிற்சாலை மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்குவதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

கடைவீதிகள், வழிப்பாட்டு தலங்கள், பொது இடங்களில் மக்கள் அதிக கூடி வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை காற்றி பறக்கவிட்டுள்ளனர்.

இதனால், கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

அதே நேரம் கொரோனா 3வது அலை செப்டம்பர் அல்லது அக்டோபரில் உச்சம் தொடும், குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

The Central Health Department has said that the 2nd wave of corona in India is not over yet.இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்தியாவை பொருத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் ஓயவில்லை. கேரளா, தமிழ் நாடு, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் உள்ளிட்ட 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.