Breaking News

ஜார்ஜியாவில் காணாமல் போன ஆஸ்திரேலிய பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

An Australian woman who went missing in Georgia is suspected to have been murdered

விக்டோரியாவின் வார்னோம்பல் பகுதியை சேர்ந்தவர் ஷேன் புரூக் எட்வர்ட். 30 வயதான ஷேன் புரூக் எட்வர்ட் ஜார்ஜியாவில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை 30 ஆம் தேதி, ஜார்ஜியா தலைநகர் திப்லிசி அருகே அமைந்துள்ள டாட்ஸ்மிண்டா வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு சென்ற ஷேன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இவரை கண்டறியும் முயற்சியில் மோப்ப நாய்கள் உட்பட , தேடுதல் குழுவும் ஈடுபட்டனர்.
பல மணி நேர தேடுதலுக்கு பிறகு, ஷேன் புரூகின் உடல் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Australian woman who went missing in Georgia is suspected to have been murdered.இது குறித்து ஜார்ஜியா வெளியுறவுத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மலைச்சரிவின் ஒரு பகுதியில் ஷேனின் உடலை தேடுதல் குழு கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவுடன், துருக்கியில் இருந்து ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஜார்ஜியா விரைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்வதாக ஜார்ஜியா வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷேன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் , காவல்துறை விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜார்ஜிய ஊடகங்கள், ஏற்கனவே அதே பகுதியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

Link Source: https://ab.co/3jojhK8