Breaking News

உக்ரைனின் கிவிவ் நகரில் 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்தது நல்வாய்ப்பாக அங்கிருந்த மக்கள் 37 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

The building was completely damaged in an attack on a 12-storey apartment building in Kiev, Ukraine. Fortunately, 37 people were evacuated. Two people were seriously injured.

இந்நிலையில் தாக்குதல் காரணமாக கட்டிடத்தின் மேல் பகுதி முற்றிலும் உருக்குலைந்து உள்ள நிலையில் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. கிவிவ் நகருக்கான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யும் நோக்கில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பல தேவாலயங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறி வைத்து அவற்றை அழிக்கும் நோக்கில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதாக கிவிவ் நகர மேயர் Oleksiy Kuleba கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக இதுவரை 30 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக ஐநா சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடும் மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட சமூகத்தினர் தொலைத்தொடர்பு சேவை இல்லாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர்கள் மரணத்தின் விளிம்பிற்கு சென்றதாகவும் உருக்கமுடன் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக Northerns Rivers எம்.பி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் அவசரகால அழைப்புகளை மேற்கொள்வதற்கான தொலைத்தொடர்பு சேவையை உடனடியாக சீரமைக்க வில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

The building was completely damaged in an attack on a 12-storey apartment building in Kiev, Ukraine. Fortunately, 37 people were evacuated. Two people were seriously injured..உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் சீனாவுடனான புனிதமற்ற ஒரு உறவை ரஷ்யா மேற்கொண்டு வருவதாகவும் இது அதிபர் விளாதிமிர் புதின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும், பிரமை பிடித்தவர் போல விளாதிமிர் புதின் செயல்பட்டு வருவதாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார். உக்ரைன் மீதான புதினின் கணக்கு தவறாகி விட்டதாகவும் Peter Dutton தெரிவித்துள்ளார்.

கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் Ed Sheeran குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இருப்பதாகவும் இந்நிலையில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள் ஷேர்ன் வான் மற்றும் Michael Gudinski ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் நாட்களில் அவர் இசை நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாகவும் அதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேடும் நடவடிக்கை அதிகரித்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆஸ்திரேலியர்கள் எந்தவித மான தனிமைப்படுத்துதல் இன்றி நியூசிலாந்துக்கு வருகை தரலாம் என்று நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பள்ளி விடுமுறை காலம் மற்றும் நியூசிலாந்தில் தொடங்கும் சீசன் காரணமாக 40 சதவீதத்திற்கும் அதிகமான சர்வதேச பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக நியூசிலாந்து முக்கிய முடிவுகளை மேற்கொண்டு உள்ளது.

அந்த வகையில் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் இன்றி பயணிகள் நியூசிலாந்து வரலாம் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருவதாக நியூசிலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் Stuart Nash தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3IiDNXg