Breaking News

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் 1.17 பில்லியன் டாலர் மதிப்பில் அமையவுள்ள நிக்கல் சுரங்கம் தேசியளவில் முக்கிய திட்ட அந்தஸ்த்தை பெறுவதையொட்டி விரைந்து பணிகள் முடிக்கப்படும் என பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்காட் மோரீசன் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிலுள்ள கல்கூரி பகுதிக்கு வந்திருந்தார். அங்கு விரைவில் அமையவுள்ள நிக்கல் சுரங்கத்தின் மூலம் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார். இங்கு தோண்டி எடுக்கப்படும் கனிமங்கள் தேசியளவில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

Prime Minister Scott Morrison has said work on the $ 1.17 billion nickel mine in Western Australia will be completed soon as it gains major project status nationally..இந்த திட்டத்துக்காக ஆஸ்திரேலிய அரசு போஸைடன் நிக்கல் என்கிற தனியார் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னதாக கல்கூரியிலுள்ள அந்நிறுவனத்தின் பேட்டரி உலோக சுத்திகரிப்பு மையத்துக்கு ஆஸ்திரேலிய அரசு 120 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. நிக்கல் சுரங்கத்தை தவிர கோல்ட்ஃபீல்ட்ஸ் பகுதியில் கிராமப்புற சுகாதாரத்துக்கு பயன் தரும் வகையில் இரண்டு புதிய பல்கலைக்கழகங்கள் 36 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்படும் என பிரதமர் மோரீசன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3N0Uf1L