Breaking News

காட்டு தீயில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ரசல் பார்ட்பையின் மரணம் தொடர்பான பின்னணி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் யாரோவிட்ச் என்கிற பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்த ரசல் பார்ட்பை என்பவர், தேடி தண்ணீர் தொட்டியின் பின்பக்கம் சென்று புகலிடம் தேடிக்கொண்டார்.

ஆனால் அப்பகுதியில் தீ மளமளவென பரவியது. இதை கவனித்த வனப்பகுதி அலுவலர்கள் அவரை உடனடியாக மீட்டனர். போர்ட் மேக்கூவயர் பேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசல் 23 சதவீதம் தீ காயங்களுடன் இருந்துள்ளார்.

Background details of the death of Russell Bratby, who died in a wildfire without treatment, have now been released..அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராயல் நார்த் ஷோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொண்டு சென்ற போது, ரசலின் உடல்நிலை மிக மோசமடைந்தது. நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஏழு வார சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் காட்டுத் தீ பரவல் குறித்தும் ரசல் பார்ட்பை இறந்தது தொடர்பான வழக்கு லிண்ட்கோம்பில் இருக்கும் மரண விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், ரசல் பார்ட்பை காட்டுத் தீயில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பின்பு புகலிடம் தேடியுள்ளார்.

ஆனால் காட்டுத்தீ பாதிப்பால் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதை ரசல் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்கப்படும் சாதாரணமாக இருந்தவருக்கு, பிறகு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட சில ரசாயண மாற்றம் காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரசல் பார்ட்பையின் மரணம் விபத்தால் நிகழ்ந்தது என்று மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Link Source: https://ab.co/3wfIm1X