Breaking News

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை உலக சுகாதார அமைப்பின் ஆஸ்திரேலிய பிரதிநிதி மறுத்துள்ளார்.

The Australian representative to the World Health Organization has denied reports by US intelligence that the virus has spread from China's Wuhan laboratory.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தவருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து பரவியிலிருக்கலாம் என்று அண்மையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது. இதை சீனா மறுத்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார ஆய்வு குழுவில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதிநிதியான வைராலஜஸ்ட் டொமினிக் டையர் அமெரிக்க புலனாய்வு துறையின் அறிக்கையை மறுத்துள்ளார்.

The Australian representative to the World Health Organization has denied reports by US intelligence that the virus has spread from China's Wuhan laboratoryசீனாவில் ஆய்வுக்கு மேற்கொண்ட உலக சுகாதாரத்துறை குழுவில் தானும் இடம்பெற்றதாகவும், இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 4 வாரங்கள் வுஹானில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க புலனாய்வு துறையின் அறிக்கையை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற நிலையில் தான், மாறுபட்ட அறிக்கைகளை பல்வேறு அமைப்புகள் தெரிவிப்பதாகவும், ஆனால் ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை என்றும் பேராசிரியர் டையர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்க கூறும் குற்றச்சாட்டு உண்மையாயின் ஆதாரம் அவசியம் என்றும், அதை பெறுவது அவ்வளவு எளிதல்ல என்று தன்னால் புரிந்துக்கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் வுஹானில் இருந்த 4 வாரங்களும் சீன அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக பேராசிரியர் டையர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் அல்லது நியூசிலாந்து போன்ற நாடுகளில் எவ்வாறு ஆய்வு மேற்கொள்வோமோ அதே போன்ற ஒரு ஆய்வை அங்கு மேற்கொள்ள முடிந்ததாகவும் பேராசிரியர் டொமினிக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Zhao Lijian, அமெரிக்க புலனாய்வு துறையின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை அமெரிக்க நம்பாமல் அரசியல் செய்ய அமெரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

The Australian representative to the World Health Organization has denied reports by US intelligence that the virus has spread from China's Wuhan laboratory..இந்த வருட தொடக்கத்தில் சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார ஆய்வுக்குழு, கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்த பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று தெரிவித்துள்ளது. மேலும் வௌவால் போன்றவற்றில் இருந்து இன்னொரு விலங்கு மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆனால் இந்த அறிக்கை மீது ஆஸ்திரேலியா உள்ளிடட 14 நாடுகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளன.

அதன்படி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் மாதிரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட வேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்துள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், ஆய்வுக்குழு சில விவரங்களை பெறுவதில் சிரமம் இருந்ததை தன்னிடம் பகிர்ந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

2003 ல் பரவிய சார்ஸ் வைரஸ் குறித்த முழுமையான விவரம் கிடைப்பதற்கு 15 ஆண்டுகள் வரை ஆனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடையே ஒற்றுமையும், அறிவியல் பூர்வமான ஆய்வும் அவசியம் என்றும் பேராசிரியர் டொமினிக் டையர் வலியுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/3wLAgeH