Breaking News

பெரியவர்களுக்கு ”பூஸ்டர்”ஆக செலுத்தப்பட ”மாடர்னா” தடுப்பூசிக்கு டிஜிஏ அனுமதி.

TGA approves Moderna vaccine for booster in adults

மாடர்னா கோவிட்-19 தடுப்பூசியை பெரியவர்களுக்கு பூஸ்டராக பயன்படுத்த தேசிய மருந்துகள் கட்டுப்பாடு சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.

நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதா, வேண்டாமா என்பதை இப்போது பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறியுள்ளார். ATAGI-ஆல் அங்கீகரிக்கப்பட்டால் பூஸ்டராக, பைசருக்கு அடுத்து இரண்டாவது தேர்வாக மாடர்னா இருக்கும்.

திரு ஹன்ட், டிஜிஏ அளித்துள்ளது “முதல் பச்சை விளக்கு”தான் என்றும், ATAGI தான் இறுதியான ஒன்றை வழங்கும் என்று, தான் நம்புவதாகவும் கூறினார். “எனவே, ஃபைசர் பூஸ்டரைத் தவிர, இதற்கும் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால், மிக மிக விரைவில் ஆஸ்திரேலியர்கள் இரண்டு பூஸ்டர்களில் ஒன்றைதேர்வு செய்துகொள்ளலாம்,” என்றும் அவர் கூறினார்.

TGA approves Moderna vaccine for booster in adults.அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இது பற்றி ஒரு “நேர்மறையான அறிவிப்பு” வெளியாகும் என்று தான் “மிகவும் நம்பிக்கையுடன்” இருப்பதாக திரு ஹன்ட் கூறியுள்ளார். அரசு, 25 மில்லியன் மாடர்னா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது, அதில் 15 மில்லியன் 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் பூஸ்டர்களாகப் பயன்படுத்தப்பட உள்ளது. பூஸ்டர்கள் பெரியவர்களுக்கு, அவர்களின் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு பிறகு ஆறு மாதங்களிலும், கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு, இரண்டாவது தவணைக்குப் பிறகு இரண்டு முதல் ஆறு மாதங்களுக்குள்ளும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரானின் வரவிற்கு பதிலளிக்கும் வகையில் பூஸ்டரின் கால அளவை மறுபரிசீலனை செய்யும்படி ATAGI சமீபத்தில் சமூக ஆர்வலர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கால அளவை சுருக்குவது வைரஸுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்தும் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லாததால், எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3DM4BNl