Breaking News

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி : இருவரில் ஒருவருக்கு ஒமைக்ரானின் திரிபு வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தகவல்

Omicron infection confirmed in Queensland, Australia. study reveals that one in two people is infected with the omega strain virus

ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாகாணங்களில் ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு பரவலாக உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் குயின்ஸ்லாந்து மாகாணத்திலும் இருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களது மரபணு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பும், மற்றொருவருக்கு ஒமைக்ரான் Like எனப்படும் ஒமைக்ரானின் திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனை குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

இது வெறும் தொடக்கமே என்றும் நாம் பெருந்தொற்றோடு தொடர்ந்து போராட வேண்டி உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Omicron infection confirmed in Queensland, Australia. study reveals that one in two people is infected with the omega strain virus.சிட்னியில் இருந்து Cairns வந்த நைஜீரிய நபர் ஒருவருக்கு முதலில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார். இதனிடையே இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் அமைக்கிறான் வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பிரிஸ்பேனில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க நபரின் மரபணு மாதிரிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு அமைப்பு வகை வைரஸ் ஒன்று, ஒமைக்ரான் Like என்ற பெயரில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட இருவரும் Cairns, Brisbane மருத்துவமனைகளில் தற்போது சீரான உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் வைரஸின் மாதிரி திரிபு வைரஸ் பாதிப்பு குறித்து உறுதி செய்துள்ள தலைமை சுகாதார அதிகாரி Peter Aitken, ஒமைக்ரான் மற்றும் ஒமைக்ரான் Like வைரசின் பாதிப்பு மற்றும் வித்தியாசங்களை பற்றி இத்தனை சீக்கிரம் கூற முடியாது என்றும், அது தொடர்பான விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்பே ஒமைக்ரான் Like வைரஸின் தன்மை தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3pLZuYv