Breaking News

கொரோனா பெயரில் பல ஆயிரம் டாலர் முறைகேடு- பிடியில் டாஸ்மானியன் அரசு..!

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பிரபல விடுதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

Thousands of dollars in the name of Corona - Tasmanian government in the grip ..!

லிப்ரல் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட தேவைக்காக கொரோனாவுக் என்று ஒதுக்கப்பட்ட 700,000 டாலர் பணத்தில், சொகுசு விடுதி ஒன்று மேம்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மானியன் அரசாங்கத்தின் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காலக்கட்டத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைக்கான அலுவல் பிரிவுக்கு அங்குள்ள பிரபல வெல்லர்ஸ் இன் என்கிற விடுதி அரசாங்கத்தால் 3 மாதங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூரில் கொரோனா பாதிக்க வாய்ப்புள்ள நபர்கள் அங்கு தங்கவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Thousands of dollars in the name of Corona - Tasmanian government in the grip ..!அதற்காக இணையவசதி சேவைக்கு 60 ஆயிரம் டாலர்கள், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு 20 ஆயிரம் டாலர்கள், பாதுகாப்பு மற்றும் காவல் பணிகளுக்காக 278000 டாலர்கள் செலவிடப்பட்டதாக அரசு கணக்கு காட்டியது. சமீபத்தில் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற வரி நடைமுறை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் அனிதா டாவ், வெல்லர்ஸ் இன் அரசாங்கத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 717,246 டாலர்கள் விடுதியின் மறுசீரமைப்பு பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரெப்பா, மாநில அரசு மக்களின் வரிப் பணத்தை வீணாக செலவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக டாஸ்மானியன் அரசு செலவு செய்த பணம் தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துணை பிரதமர் மைக்கேல் ஃபெர்கியூசன், வெல்லர்ஸ் இன் விடுதியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்திக் கொண்டது டாஸ்மானியா அரசின் சுகாதாரத்துறை எடுத்த முடிவு. இந்த விடுதிக்கு லிப்ரல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உரிமையாளராக உள்ளார் என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளது குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.