Breaking News

தூக்கமின்மையை ஏற்படுத்தும் கொரோனா பாதிப்பு

கொரோனா ஊரடங்கின் போது பலருடைய உறக்கச் செயல்பாடுகளின் மாற்றம் ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடைய தூக்கமும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தன. இதை கொரோனாசோமானியா என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

During the corona curve many people have a change in their sleep patterns. The sleep of those affected by corona also suffered various effects. Analysts refer to this as coronasomnia.

இதையடுத்து விஞ்ஞான உலகம் கொரோனாவால் உறக்கச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டன. அதன்படி கொரோனா போன்ற ஒரு வைரஸ் உடலுக்குள் புகுந்துவிட்டால், அதை பல்வேறு புரதங்களும் எடுத்தும் போரிடும். அப்படிப்பட்ட புரதங்களில் ஒன்று தான் சைட்டோகின்ஸ்.

மனிதனுக்கு உறக்கத்தை வழங்கும் செயல்பாடுகளில் இது முதன்மையானதாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் போது ஏற்படும் உடல்ரீதியான மாற்றம் காரணமாக உறக்கச் செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்படுகிறது. அவரவர் உடலுக்கு ஏற்ப அதில் மாறுபாடுகள் காணப்படும். பகுதிநேர உறக்கம், அடிக்கடி உறக்கத்தில் முழிப்பது, ஆழமான உறக்கம், இரவு நேரம் தூக்கம் கெட்டு பகலில் தூங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்

இதுபோன்ற மாறுபாடுகள் உங்கள் இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உடலை வருத்தும் பணிகளை மேற்கொள்ளுங்கள், பகலில் உறக்கம் வந்தாலும் தூங்காதீர்கள், பளிர் வெளிச்சத்தை கண்களுக்கு அருகாமையில் கொண்டு செல்லாதீர்கள். இதுபோன்ற செயல்பாடுகள் உங்களை மெல்ல சராசரி உறக்க நிலைக்கு இட்டுச் செல்லும்.