நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள மிகப்பெரிய நிலக்கரி சுரங்கப் பகுதியை வரும் 2030-ம் ஆண்டுக்குள் மூடப்படும் என பிரபல பி.எச்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஆர்தர் மலைப் பகுதி அமைந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. இதை தற்போது பி.எச்.பி நிறுவனம் நிர்வாகம் செய்து வருகிறது.
சுமார் 2000 ஊழியர்கள் இந்த சுரங்கப் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸின் ஆர்தர் மலைப் பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கு 2026-ம் ஆண்டு வரை மட்டுமே பி.எச்.பி-க்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அது 2030-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பி.எச்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த சுரங்கத்தை 2045-ம் ஆண்டு வரை நிர்வகிக்க பி.எச்.பி நிறுவனம் அனுமதி பெறும் முயற்சியில் இருந்தது. ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் பராமாரிப்பில் கடுமையான விதிகளை பின்பற்றி வருகிறது. இதன்காரணமாக 2030-ம் ஆண்டுடன் ஆர்தர் மலைப்பகுதியை பிஎச்பி கைவிடுகிறது.