Breaking News

டாஸ்மானியாவின் தேர்தல் தேதி அறிவிப்பு !

Tasmania's election date announced

டாஸ்மானியா தேர்தல் மே 1ஆம் தேதி நடக்கும் என்று Tasmania’s Liberal Premier Peter Gutwein அறிவித்துள்ளார். மார்ச் 2ம் தேதியன்று Tasmania’s Liberal-லிருந்து சபாநாயகர் Sue Hickey நீக்கப்பட்டதற்கு பிறகு, மாநில அரசாங்கம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியது. மாநிலத் தலைவராக Peter Gutwein முதன் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்கிறார்.

Tasmanian Liberal Premier Peter Gutweinஇது குறித்து அவர் கூறுகையில், டாஸ்மானியாவிற்கு முன்பு இருந்ததை விட வலுவான, நிலையான பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் தேவை. இன்று காலை ஆளுநரை சந்தித்து மே 1ம் தேதி சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதாகவும், ஏனென்றால் இதற்கு மேல் இங்கு நிலையற்ற ஆட்சி நடப்பதை என்னால் பொறுத்த கொள்ள முடியாது என்றார். மேலும் Liberal Party ன் உறுப்பினராக அவர், எவ்வாறு எல்லா விஷயத்திற்கும் ஒத்துழைப்பு தருவார் என்று தெரியவில்லை. சட்டசபையின் மேல்சபையின் தேர்தலும் அதே நாளில் நடைபெறும் என்றார்.

தேர்தல் வாக்குறுதிகளை பாராளுமன்றத்தில் இன்னும் 2 நாட்களில் Liberal Party நிறைவேற்றும். இது வரை இந்த கட்சி வியாபார நன்கொடையாக 5000 டாலருக்கு அதிகமாக பெற்றுள்ளது. இதைப்போல் மற்ற கட்சிகளும் தானாக முன்வந்து தனக்கான தொகையை வெளிப்படுத்தும் என்றார்.

எதிர்பாராத காரணத்தால் ஜூன், ஜூலை அல்லது ஆகஸ்டில் பாராளுமன்றம் செயல்படாமல் போனால் அது நன்றாக இருக்காது. அதற்காக தான் மே மாதத்திலேயே தேர்தல் நடத்த வலியுறுத்துவதாகவும் கூறினார்.

Greens MPs Cassy O'Connor and Rosalie WoodruffGreens MPs Cassy O’Connor மற்றும் Rosalie Woodruff , தங்களுடைய கட்சி பிரச்சாரத்திற்கு தயாராக உள்ளதாகவும் நாங்கள் Tasmania மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைப்போம் என்றும், மக்கள் அதற்கு ஒத்துழைத்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.

Sue Hickey தனக்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லை. தான் மாநில தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தான் அரசாங்கத்திற்கு நம்பிக்கையாக இருப்பேன் என்று எழுதியிருந்தார். மேலும் அவர் கூறும்போது சரிசெய்யப்படாத பல பிரச்சனைகள் இருக்கும்போது அதை தீர்க்காமல் எந்த ஒரு அரசாங்கமும் தேர்தலுக்கு செல்லாது என்றார்.

Hodgman australiaHodgman அரசியலிருந்து விலகிய பின்பு ஜனவரி 2020ல் Tasmaniaவின் 46வது மாநிலத் தலைவராக Gutwein பொறுப்பேற்றார். 2002ல் Bass MHA வில் மாநில பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராவார். முன்னால் federal minister Jocelyn Newman-க்கு நிதியமைச்சராக இருந்தவர் 2014 தேர்தல் வெற்றிக்கு பிறகு Mr Hodgman-னின் பொருளாளார் ஆனார். பின்பு ஏற்பட்ட Ferguson விலகுததால் Hodgman எந்த எதிர்ப்பும் இல்லாமல் போட்டியின்றி தலைவரானார்.

Covid 19 தொற்றுநோயை Gutwein கையாண்ட விதம் மக்களிடையே நம்பிக்கையை தந்தது. 61 சதவீத டாஸ்மானியர்கள் இவரை மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்க முன்வந்துள்ளனர். வெறும் 26 சதவீத டாஸ்மானியர்கள் மட்டுமே எதிர்கட்சி தலைவர் Rebecca White ஐ ஆதரிக்கின்றனர். 52 சதவீத மக்கள் Gutwein-ன் liberal கட்சியை ஆதரித்தனர். பிப்ரவரியில் 27% ஆதரவாக இருந்தது. மார்ச் மாதத்தில் 30% ஆதரவு Liberal கட்சிக்கு கிடைத்தது. Tasmania தற்போது ஒரு தேர்தலை விரும்புவதாக Gutwein கூறினார்.