Breaking News

கோவிட்-19 தொற்றுடன் பல இடங்களுக்கு சென்ற ஒருவரால் பிரிஸ்பேன் நகரத்திற்கு கொரோனா எச்சரிக்கை விடப்பட்டுள்ளது !

மாநில முதல்வர் Annastacia Palaszczuk கூறுகையில், Stafford-ஐ சேர்ந்த இந்த 23 வயதான நபர் Covid-19 சோதனை செய்துள்ளார் சோதனையின் முடிவு வருவதற்குள் பிரிஸ்பேன் மற்றும் Moreton Bay-ல் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள முதியோர் இல்லம், ஊனமுற்றோர் காப்பகம், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளில் இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகள் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை செயல்படுத்தப்படும். அப்பகுதியில் நெரிசல் நிறைந்த இடங்களில் வாழும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் Palaszczuk கூறினார்.

Jeannette young australiaLandscaper ஆக இருக்கும் அந்த நபர் திங்கள்கிழமை அறிகுறிகள் இருப்பதாக Nundah Respiratory கிளினிக்கில் பரிசோதனை செய்தார் என தலைமை சுகாதார அதிகாரி Jeannette young கூறினார். வியாழக்கிழமை இரவு அன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அவர் Royal பிரிஸ்பேன் மற்றும் Women’s மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் எப்படி பாதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை எனவும் Young கூறினார்.

அவர் அறிகுறிகளுடன் சென்ற இடங்களில் கடந்த மார்ச் 20 சனிக்கிழமை அன்று Corindale Shopping Centre, Including Shinobi Ramen Noodle shop, Fresh sensations, Go Vita, Robins Kitchen, Harris Scarfe and Kmart போன்ற இடங்களுக்கு மதியம் முதல் சென்றுள்ளார். அதன்பின் மார்ச் 20, 21, 22 போன்ற தேதிகளில் அவர் நிறைய இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இறுதியாக மார்ச் 25 வியாழக்கிழமை காலை 11:15 மணி முதல் 11: 40 மணி வரை Nundah Respiratory மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

குறைந்த ஆபத்து உள்ள இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு அந்த இடங்களுக்கு சென்ற மக்களின் அறிகுறிகளை கண்காணித்து உடல்நிலை சரியில்லை என்றால் சோதனை செய்ய கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், சமூகஇடைவெளியை பின்பற்றப்பட வேண்டும். மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தயவு செய்து வீட்டில் இருங்கள் இல்லையென்றால், பரிசோதனை செய்யுங்கள், அப்படி செய்தால் மட்டுமே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் என Young கூறினார்.

Corona alert to Brisbane- person who has visited to many places with covid-19 infection 1தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் புதிதாக 6 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. Papua New Guinea-ல் இருந்து மூன்றும், Ethiopia-ல் இருந்து ஒன்றும் உட்பட 69 தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,584 சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் Palaszczuk கூறுகையில், மக்கள் பாதுகாப்பை விட்டு விலகி வருவதாக தெரிகிறது, நாம் தொற்றுநோய்க்கு மத்தியில்தான் இருந்து கொண்டு வருகிறோம், நோய்த்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. அதனால் நாம் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என கூறினார்.

மருத்துவமனைகள், முதியோர் இல்லம், ஊனமுற்றோர் காப்பகம் மற்றும் சிறைச்சாலைகள் போன்ற பகுதிகளுக்கு இந்த நபரின் Covid-19 தொற்றால் கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.