Breaking News

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்பெல்லிங் பீ போட்டியில் வெற்றி வாகை சூடிய தமிழ்சிறுமி தீக்‌ஷிதா கார்த்திக்.

Tamil girl Deekshita Karthik wins Australian PM Spelling Bee contest

உலகம் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ள கடினமான வார்த்தைகளின் எழுத்துக்களை சரியாக உச்சரிக்கும் போட்டி ஸ்பெல்லிங் பீ என்று அழைகப்படும் ஸ்பெல்லிங் பீ போட்டி மிகப்பிரபலம். அதே போன்றதொரு போட்டி Prime Minister’s Spelling Bee என்று ஆஸ்திரேலியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் தமிழ் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11.
‌5-6 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தீக்சிதா பங்கேற்றார். மெல்போர்னில் வசித்து வரும் அவர், Haileybury கல்வி நிலையத்தில் பயின்று வருகிறார்.

நேரக்கட்டுப்பாட்டுடன் போட்டியில் வழங்கப்பட்ட 30 சொற்களில் 29 சொற்களை தீக்சிதா சரியாக எழுத்துக்கூட்டி உச்சரித்திருந்தார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள தீக்சிதா, வேகமும் துல்லியமும் தனது பலம் எனக் கூறினார்.

அதேநேரம் சொற்களை எழுத்துக்கூட்டி வாசிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனவும், இப்போட்டியையொட்டி தான் பல ஆயிரக்கணக்கான சொற்களை வாசித்து பயிற்சிபெற்றுக்கொண்டதாகவும் தீக்சிதா தெரிவித்தார்.

2021ம் ஆண்டுக்கான Prime Minister’s Spelling Bee போட்டியில் ஆண்டு 3-4 க்கான பிரிவில் 10 வயது அரேலி வாங்கும், 7-8 க்கான பிரிவில் 12 வயது Evan Luc-Tran-உம் வெற்றிபெற்றனர்.

குறித்த போட்டியில் மொத்தமாக 490 பள்ளிகளிலிருந்து சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

தேசியரீதியில் வெற்றிபெற்ற இவர்கள் மூவரும் விரைவில் கன்பரா சென்று பிரதமர் ஸ்கொட் மொறிசனை நேரில் சந்திக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் புத்தகங்கள்,ஐ பேட் மற்றும் அவர்கள் படித்த பள்ளிக்கு $1000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

Link Source: https://bit.ly/3vLAf9z