ஆப்கானிஸ்தானில் கடந்த 45 நாட்களில் 40 மாவட்டங்களை தாலிபன் அமைப்பு கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. வெளிநாட்டு படைகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்ததில் இருந்து கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளை கையகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2001 செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து அமெரிக்கா தன்னுடைய படைகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வந்தது. பல்வேறு முறை படைகளை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். பாதிப்பை குறிக்கும் வகையில் அதே செப்டம்பர் 11ஆம் தேதி படைகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக தாலிபன் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆயிரத்து 481 லட்சம் ரூபாயை அமெரிக்கா செலவு செய்துள்ளது. முடிவில்லாத ஒரு போரில் ஈடுபட விரும்பவில்லை என்றும் அதனால் படைகளை விலக்கிக் கொள்கிறோம் என்றும் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க படைகளைச் சேர்ந்த 3500 வீரர்களும் நேட்டோ படையை சேர்ந்த 7 ஆயிரம் வீரர்களும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு இருந்தனர். அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை விமானங்கள் மூலமாக திரும்ப எடுத்துச் செல்லும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. எனவே வீரர்களும் அங்கிருந்து தங்கள் உடைமைகளுடன் புறப்படுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தாலிபன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை கையகப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் படைகள் இருந்து வந்த Uruzgan பகுதியை தற்போது தாலிபான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தாலிபான் அமைப்பு தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் Sar-e Pol பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid கூறியுள்ளார். இதனை ட்விட்டர் வாயிலாக தெரிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தாலிபான்கள் மீது நடத்திய தாக்குதலில் 11 தாலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் அதற்கான புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டது.
Link Source: https://ab.co/3vGqJ7z