Breaking News

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் முழுவதும் தாலிபான்களின் கட்டுக்குள் வந்தது : மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மிக சவாலாக உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரிக்கை

Taliban take control of Kabul airport in Afghanistan. Australian PM Scott Morrison warns of evacuation

இதுவரை ஆஸ்திரேலியாவை சேர்ந்த 162 பேர் மிகுந்த நெருக்கடிக்கு இடையே மீட்கப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதி விமான தளத்தில் இருந்து மீட்கப்பட்ட 94 பேர் பத்திரமாக ஆஸ்திரேலியாவின் பெர்த்-ல் தரையிறங்கினர்.

Taliban take control of Kabul airport in Afghanistan. Australian PM Scott Morrison warns of evacuation.மேலும், ஆப்கனில் உள்ள ஆஸ்திரேலியர்கள் தீவிரமாக காபூல் விமான நிலையத்தை அடைய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், விமான நிலையத்தை அடைய முடியாத அளவுக்கு தாலிபான்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்து உள்ளனர். காபூல் விமான நிலையத்தில் இருந்து யாரும் வெளியேறாத வண்ணமும், நுழைய முடியாத படியும் தொடர்ந்து தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர்.
அதே நேரத்தில் ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு ராணுத் தரப்பும் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Taliban take control of Kabul airport in Afghanistan. Australian PM Scott Morrison warns of evacuation..காபூலில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வருவதாகவும், அங்குள்ளவர்களை தாங்கள் தொர்ந்து தொடர்பு கொண்டு வருதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய படை வீரர்கள் விமான நிலையத்திலும் உள்ள நிலையில் தாலிபான்களால் முழுவதும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அவ்வாறு செய்தால் அவர்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார். அங்கிருந்து மக்களை மீட்பதற்கான நடடிவக்கையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா விரைந்து மேற்கொள்ளும் என்றும் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Taliban take control of Kabul airport in Afghanistan. Australian PM Scott Morrison warns of evacuation,காபூல் விமான நிலையத்தில் ஆஸ்திரேலியர்கள், விசாவுடன் காத்திருப்போர் என ஏராளமானோர் தாலிபான்களின் தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்து இருப்பதாகவும், விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மக்களும் காயமடைந்து உள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் Marise Payne கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுவது சிக்கலானது என்றும், குடும்ப உறுப்பினர்களை அதிகம் கொண்ட நபர்கள் அங்கேயே இருக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3zkJdxj