Breaking News

விக்டோரியா மாகாணத்தில் சமூக பரவல் மூலமாக மேலும் ஐம்பத்தி ஐந்து பேருக்கு தொற்று : வடகிழக்கு பகுதியான Shepperton-ல் ஒருவருக்கு தொற்று உறுதி

Fifty-Five More People Infected Through Social Outbreaks In Victoria. One Infection Confirmed In Shepperton In The Northeast

Victoria மாகாணத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Shepperton புறநகர் பகுதியில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 55 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஆறு பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல. அத்துடன், தொற்றுள்ளவர்களில் 30 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

Broadmeadows மல்டி கல்சுரல் யூத் சென்டரில் 13 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அவர்கள் மூலமாக ஏராளமானோர் தொற்று தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

Fifty-Five More People Infected Through Social Outbreaks In Victoria. One Infection Confirmed In Shepperton In The Northeast.விக்டோரியாவில் சமூக பறவைகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக விக்டோரிய அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பகுதியான Shepparton-ல் மேலும் 17 பேருக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு முடக்கநிலை கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அடுத்தடுத்து அதிகரித்து வருவது மிகுந்த மோசமான நாளை காட்டுவதாக விக்டோரியா பிரிமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார். போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவதன் மூலமாக நமக்கான நல்ல நாளை நாம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Fifty-Five More People Infected Through Social Outbreaks In Victoria. One Infection Confirmed In Shepperton In The Northeast..விக்டோரியாவில் 530க்கும் மேற்பட்ட இடங்கள் தொற்று பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் தடுப்பூசி போடும் இடங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். தொற்று தொடர்புச் சங்கிலியை கண்காணிக்கும் பணியில் அதற்கான பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பெரும்பாலும் ஒரே மாதிரியான அடையாளங்கள் இருப்பதால் இவற்றில் குழப்பம் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3syU0kN