Breaking News

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 டென்னிஸ் தொடர்களை முன்கூட்டியே முடித்துக் கொள்வதாக ரபேல் நடால் அறிவிப்பு : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகல்

Rafael Nadal announces early termination of 2021 tennis series due to leg injury Withdrawal from US Open tennis tournament

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் ஆண்டில் தான் விளையாட உள்ள போட்டிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்வதாக நடால் அறிவித்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருடமாக அவதிப்படுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது என ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அண்மையில் அறிவித்து இருந்த நிலையில், தற்போது ரபேல் நடாலும் அறிவித்துள்ளார்.

Rafael Nadal announces early termination of 2021 tennis series due to leg injury Withdrawal from US Open tennis tournament.உலகின் நான்காம் நிலை டென்னிஸ் வீரரான ரபேல் நடால், வாசிங்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் தொடர் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளிலும் இருந்தும் வெளியேறி உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ப்ரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவோக் ஜோகோவிச் உடனான ஆட்டத்தின் போது கீழே விழுந்ததில் இடது காலில் காயம் ஏற்பட்டது. ஆனால், காயத்துடனேயே தான் ஓராண்டு காலம் துன்பப்பட்டு வந்ததாகவும், தற்போது கட்டாய ஓய்வ தேவைப்படுவதாகவும் நடால் தெரிவித்துள்ளார். பிரச்சனைக்கு தீர்வு காணும் பட்சத்தில் தான் இனிவரும் ஆண்டுகளில் போட்டிகளுக்கு தன்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் ரபேல் நடால் கூறியுள்ளார்.

தான் அதிகபட்ச உற்சாகத்துடனும், தீர்க்கமான மன நிலையுடனும் இருப்பதாகவும் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான ஊக்கம் தனக்கு ரசிகர்களால் வழங்கப்பட்டு வருவதாகவும் நடால் குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/2UBWrGB