Breaking News

தாலிபான் எதிர்ப்பு குழுவை ஒடுக்க நூற்றுக்கணக்கான வீரர்களை பஞ்சீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு அனுப்பவுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

Taliban have announced that they will send hundreds of soldiers to the Panjshir Valley to suppress the anti-Taliban group.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும், போர் இத்துடன் முடிவுக்கு வருவதாகவும் அறிவித்தனர்.

Taliban have announced that they will send hundreds of soldiers to the Panjshir Valley to suppress the anti-Taliban group..இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடுகளை விட்டு வெளியேறி, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைய தொடங்கியுள்ளனர்.
தாலிபான்கள் மீதான அச்சமும், பெண்கள் மீதான அடக்குமுறையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தாலிபான்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு சில இடங்களில் சிறு சிறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், காபூலில் இருந்து 125 கிமீ தொலைவில் உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் தாலிபான்களுக்கு எதிரான எதிர்ப்பு நீடித்து வருகிறது.

உள்ளூர் நிர்வாகிகள் தங்கள் நிர்வாகத்தை தாலிபான்களிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவர்களை ஒடுக்க வீரர்கள் செல்லவுள்ளதாகவும் தாலிபான்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

பஞ்சீர் பள்ளத்தாக்கு தாலிபான்கள் எதிர்ப்பு பிராந்தியமாகவே இருந்துவருகிறது.

Taliban have announced that they will send hundreds of soldiers to the Panjshir Valley to suppress the anti-Taliban group...,இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தாலிபான் எதிர்ப்பு முன்னணியை சேர்ந்த நிர்வாகி அலி மாசியம் நாசியாரி, தாலிபான்களுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்க நாடுமுழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் வருவதாகவும், தாலிபான்களுக்கு எதிரான போரில் அவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் மேலும் ரத்தம் சிந்துவதை தவிர்க்க விரும்புவதாகவும், அலி மாசியம் தெரிவித்துள்ளார்.

சமூக நீதி, சமத்துவம், அனைவருக்கும் நீதி, அகியவற்றை உள்ளடக்கிய அரசு அமைய விரும்புவதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அலி மாசியம் கூறியுள்ளார்.

Taliban have announced that they will send hundreds of soldiers to the Panjshir Valley to suppress the anti-Taliban group.,.ஆப்கானில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி அமையவேண்டும் என்றும், பெரும்பான்மை பலம் பொருந்தியவர்கள், சிறுபான்மை மக்களை நசுக்கும் போக்கு அதிகரித்தால், போருக்கு முடிவே இல்லை என்று தாலிபான் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் மசூத் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3y42vFy