Breaking News

ஆஸ்திரேலியா வர விரும்பும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் கடும் நெருக்கடியை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, அங்கிருக்கும் மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அதே நேரத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை அடையாளம் காணும் பணியை தாலிபன்கள் துவங்கியிருப்பதாக வந்த செய்தியும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Afghans who want to come to Australia are saddened that they are facing a severe crisis,இதன் காரணமாக நேட்டோ படைகளுக்கு உதவியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த மொழிப்பெயர்பாளர்கள், வியாபாரிகள் என்று அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் 2009-2013 ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் இருந்த ஆஸ்திரேலிய படைகளுக்கு மொழிப்பெயற்பாளராக இருந்த ஒருவரின் குடும்பம், ஆஸ்திரேலியா மீட்பு விமான நிலையத்தில் ஏறமுடியாத நிலையில், அவர்கள் அமெரிக்க மீட்பு விமானத்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த மொழிப்பெயர்பாளரான நசிர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவராவார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தன் குடும்பத்திற்கு உதவ நசீர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது விசா ஆவணங்களை தபால் மூலம் அனுப்ப வலியுறுத்தியதாக அவர் வேதனை தெரிவிக்கிறார்.

Afghans who want to come to Australia are saddened that they are facing a severe crisis...தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளதாக அவர் அச்சம் தெரிவிக்கிறார். அதே நேரத்தில் நசிர் குடும்பத்துக்கு இருக்கும் அச்சுறுத்தலை கண்ட அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள், அவரை தங்களுடன் அழைத்து சென்றதாகவும் நசிர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் தன் குடும்பத்தினரை மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தர வேண்டும் என்று அவர் கோரிக்க்கை விடுத்துள்ளார்.

சூழ்நிலையின் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நட்பு நாடுகளுக்கு சென்றவர்களும், ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோர விண்ணப்பிக்கலாம் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஆஸ்திரேலிய வீரர்களும், நீயூசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கான ஆப்கான் வாசிகளை ஆஸ்திரேலியா அழைத்துவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Afghans who want to come to Australia are saddened that they are facing a severe crisis..இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தங்களால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் ஆஸ்திரேலிய அரசு எடுத்து வருவதாகவும், ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் விமான நிலையத்துக்கு வெளியே இருக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.

குறிப்பாக ஆஸ்திரேலியர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு குழந்தையுடன் வசிக்கும் பெண் ஒருவர் தற்போது ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளார்.
தன்னுடைய குழந்தையும், தானும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், விமான நிலையம் வருவதற்கும் பாதுகாப்பு இல்லை என்று அச்சம் தெரிவிக்கிறார்.

இதை கருத்தில் கொண்டு மற்ற நாடுகளை போல விமான நிலையத்துக்கு வெளியே உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வாய்ப்பு மிகக்குறைவாகவே இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2WlsL1a