Breaking News

அவதூறு வழக்கு ஒன்றில் சிட்னி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு : மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan மாகாணத்தை விட்டு புறப்படுகிறார்

Sydney court orders defamation suit. Western Australian Premier Mark McGowan leaves province

கடந்த 2020ம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் Clive Palmar -ரை, இவர் மாகாணத்தின் எதிரி என கடுமையான விமர்சனங்களை ப்ரீமியர் Mark McGowan கூறியிருந்தார். இதுதொடர்பாக தொழிலதிபர் சிட்னி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனது உணர்வுகளை ப்ரீமியர் Mark McGowan கடுமையாக புண்படுத்தி விட்டதாகவும், இது சமூகத்தில் தனக்கு இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டதாகவும் நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் பாராளுமன்றம் செல்வதற்காக இரண்டு வார காலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், எனவே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து காணொளி வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் Mark McGowan கோரிக்கை விடுத்திருந்தார்.

Sydney court orders defamation suit. Western Australian Premier Mark McGowan leaves province..பாராளுமன்றத்தில் காணொளி வாயிலாக பங்கேற்பதற்கான எந்தவித வழிகளும் இல்லை என்றும் விசாரணையில் பங்கேற்றால் தான் மேலும் இரண்டு வார காலம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய இருக்கும் என்றும் Mark McGowan கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் மத்திய நீதிமன்றத்தில் தனது பதிலை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தான் பதில் அளிப்பதை மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள் எஇன்றும் Mark McGowan குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதனை மறுத்து உள்ள சிட்னி நீதிமன்ற நீதிபதிகள் Mark McGowan கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் அவதூறு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மேற்கு ஆஸ்திரேலிய அட்டார்னி ஜெனரல் John Quigley -க்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் பங்கேற்க இருந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் ஒத்திவைத்துள்ளார்.

Link Source: https://ab.co/3u23Y0C