Breaking News

அதிகாலையில் மக்கள் வசிப்பிடத்துக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிசுசூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாநிலத்தில் இருக்கும் பகுதி ஆஸ்மிங்க்டன். இங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான மார்க்ரேட் ஆற்றை ஒட்டியுள்ள “ஃபார்வர் ட்ரீமிங் ஃபார்ம்” என்கிற பண்ணை வீட்டில், கடந்த வெள்ளி அன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதில் 4 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

Seven members of the same family were killed in a shooting that took place inside a residential area in the early hours of the morningஇதுதொடர்பாக ஆஸ்மிங்க்டன் காவல்துறை ஆணையர் கிறிஸ் டாசன் நடத்திய விசாரணையில் ஃபார்வர் ட்ரீமிங் ஃபார்ம் பண்ணை வீட்டு உரிமையாளர்களான சிண்டா, பீட்டர் மைல்ஸ் மற்றும் கத்ரீனா மைல்ஸ் ஆகியோர் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அதேபோல கத்ரீனாவின் நான்கு குழந்தைகளும் இந்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த கொலை சம்பவத்துக்கு, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாநில முதல்வர் மார்க் மெக்கவுன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்தை விசாரித்து வரும் காவல் ஆணையர் டாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஃபார்வர் ட்ரீமிங் ஃபார்ம் கொலை தொடர்பாக பொதுமக்கள் முன்வந்து தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்கள் குறித்து ரகசிய காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3g35Iys