Breaking News

ரஷ்யாவில் பல்கலைகழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு : 8 பேர் உயரிழந்த நிலையில் படுகாயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

Student shooting at a university in Russia. 6 killed, 6 hospitalized

ரஷ்யாவின் Perm Krai மாகாணத்தின் Perm நகரில் இயங்கி வரும் பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் திடீரென நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக சுடத் தொடங்கி உள்ளார்.

Student shooting at a university in Russia, 6 killed, 6 hospitalizedஇந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க மாணவர்கள் வகுப்பறையின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடினர். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 8 பேர் உயரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும் லேசான காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 18 வயதான மாணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கையில் துப்பாக்கியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சம்மந்தப்பட்ட நபர் பதிவிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தான் நீண்ட நாட்களாக இதை செய்யக் காத்திருந்த்தாகவும், தற்போது அதற்கான நேரம் வந்திருப்பதாவும் அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவரின் துப்பாக்கிச்சூடு பின்னணியில் அரசியல், மத ரீதியிலான காரணங்கள் எதுவும் இல்லை என்றும், வெறுப்புணர்வின் அடிப்படையில் மாணவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Student shooting at a university in Russia 6 killed, 6 hospitalizedரஷ்யாவில் துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், வேட்டைக்காக பயன்படுத்தும் துப்பாக்கி அனுமதியை பெற்று இது போன்ற தவறான முறையில் பயன்படுத்துவதாக போலீசார் கூறியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு பள்ளி மாணவன் ஒருவன் கல்லூரி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: shorturl.at/axyzE