நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இந்த வாரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு உடன் கூடிய பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது தற்போது தொடங்கி இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிரேட்டர் சிட்னி பகுதியில் அடுத்த வாரத்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை பொழிவு இருக்கும் என்றும், செவ்வாய், புதன் கிழமைகளில் 10 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகும் என்றும் வானியல் ஆய்வு மையமான BOM தெரிவித்துள்ளது. சிட்னியை பொறுத்தவரை 24 டிகிரி செல்சியாக இருக்கும் என்றும், வசந்தகாலத்தை வரவேற்க மக்கள் தயாராகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றுடன் கூடிய இடி, மழை காரணமாக ஒரு சில பொருட்சேதங்கள் ஏற்படலாம் என்றும், 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்படும் என்றும் அலையின் உயரம் 3.5 மீட்டர் வரை இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் மக்கள் உரிய முன்னெச்சரிகையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Link Source: shorturl.at/rsCKV