Breaking News

பாராளுமன்ற வளாகத்திற்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஊழியர் !

Brittany Higgins

ஆஸ்திரேலியாவில், பாராளுமன்ற மாளிகையில் மத்திய அரசு பெண் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் Linda Reynolds வெள்ளிக்கிழமை இரவு drinking session-ற்கு பிறகு 24 வயதுடைய பெண் ஊழியரை தனது அலுவலகத்தில் வைத்து பலாத்காரம் செய்தார் என்று கூறப்படுகிறது. இவர் கூறிய பிறகு தான் பார்லிமென்ட்டில் பணிபுரிந்த பல பெண்கள், எவ்வாறு தங்களை நடத்தினார்கள் என்பதை கூறினர்.

linda reynoldsBrittany Higgins அந்த வேலையில் சேர்ந்து 4 வாரங்கள் மட்டுமே ஆனது என்றும், இந்த சம்பவம் உண்மையானது என்றும் கூறினார். Brittany Higgins இப்போது அரசாங்க வேலையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பிரதம மந்திரி அலுவலகத்தின் உறுப்பினர் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகவும், Brittany Higginsக்கு அரசின் ஆதரவு எப்போதும் உண்டு. அவருடைய நலனுக்கான செயல்களில் அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் கூறினர்.

Senator Reynolds கூறுகையில், Brittany Higginsன் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், பணிபுரியும் இடத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும். என்னுடைய முதன்மையான வேலை எனது ஊழியரின் நலனும், அவர்களுக்கு தேவையான ஆதரவை தருவதே ஆகும். இதில் அவர் Australian Federal போலீசிடம் புகார் அளிக்கும் உரிமைக்கான ஆதரவு அடங்கும் என்றார்.

Prime Minister Scott Morrison தனது அறிக்கையில், அரசு இது போன்ற அனைத்து சம்பவங்களையும், பணியின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் மிகவும் தீவிரமாக எடுத்து கொள்கிறது என்றார். Brittany Higginsக்கு ஆதரவாக Liberal backbencher Jason Falinski ட்வீட் செய்துள்ளார். தாக்குதல் எந்த விதத்திலும் இருக்கலாம். ஆனால் பாலியல் கொடுமை மிகவும் மோசமானது. இந்த விஷயத்தை பற்றி பேசிய Brittany Higgins தைரியத்தை நாம் மதிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ACT போலீஸ் கூறுகையில், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டவருடன் பேசியதாகவும், அவர் முறையான புகார் தர விரும்பவில்லை என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளது. Brittany Higgins இது பற்றி கூறும்போது, லிபரல் கட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய கனவு வேலையை விட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தான் புகார் கொடுக்கவில்லை என்றார்.

2019ம் ஆண்டு மே மாதத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ அல்லது Gold Coast செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் Gold Coast சென்றால் தனக்கு வேலை இருக்காது என்று அவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.