Breaking News

பெற்றோரால் தாக்கப்பட்ட ரஷ்ய பெண் குழந்தை-சமூக தொண்டு செய்வோரின் பாதுகாப்பில் வளரும் அவலம் !

Russian girl assaulted by parents she is in care of social workers

தெற்கு ரஷ்யாவை சேர்ந்த Omsk Oblast பகுதியில் பெற்றோர்களே குழந்தைகளை கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

Omsk Oblast பகுதியை சேர்ந்தவர்கள் Alexander Pogiba – Yulia Pogiba தம்பதியினர். இவர்களுக்கு Sasha என்ற பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர் . இவர்கள் வீட்டிற்குள் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தயக்கத்துடன் உள்ளே சென்றுள்ளார். அங்கு வீட்டின் உள்ளே சிறுமி இரத்தம் நிறைந்த ஆடையுடன் படுக்கையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .

அந்த சிறுமி பெற்றோரால் கைவிடப்பட்டார் என்பதை உறுதி செய்த பின் அவளை பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்தார். அவளுக்கு ஏற்பட்ட மோசமான காயங்களுக்கு எந்த வித சிகிச்சையும் அளிக்கப்படாததால், அவளால் கண்களை கூட திறக்க முடியவில்லை. எனவே 2020 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியன்று சாஷா மருத்துவனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் சாஷாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது அவர் அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதால், இந்த விவகாரம் தெரியவந்தது.

Alexander Pogiba – Yulia Pogiba தம்பதியினர் பல குற்றச்சாட்டுகளால் பல முறை போலீசில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை என்றும், தங்களது நான்கு குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு சென்றுள்ளதாகவும், மேலும் குழந்தைகளையும் தாக்கியதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டுள்ளனர்.

The Public Prosecutor’s Office கூறுகையில், இந்த பெற்றோர் குழந்தைகளை உடல் மற்றும் மனம் பாதிக்கும்படி நீண்ட நேரம் வீட்டில் தனியாக விட்டு சென்றுள்ளனர். இந்த சிறுமியின் தந்தை ஐந்து முறை வேறு காரணத்திற்காக தண்டணை பெற்றுள்ளதாகவும், பிப்ரவரி 2018 முதல் இந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் ஒழுங்கற்ற வளர்ப்பு முறைக்காக உள்ளூர் போலீசின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .

Yulia Pogibaவுக்கு 300 மணி நேர பொது சேவை செய்ய வேண்டும் என்றும், அவரது கணவருக்கு ஒருவருட சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் பெற்றோர் என்ற உரிமையை இழந்துள்ளனர். தற்போது இவர்களுடைய குழந்தைகள் சமூக தொண்டு செய்வோரின் பாதுகாப்பில் உள்ளனர்.