Breaking News

ஆஸ்திரேலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தங்குமிட வசதியை 52 முறை தவறாக பயன்படுத்திய விவகாரம் : தெற்கு ஆஸ்திரேலிய எம்.பி மீது குற்றச்சாட்டு

தெற்கு ஆஸ்ரேலியாவின் Mount Gambier – Independent பாராளுமன்ற உறுப்பினர் Troy Bell, தனக்கு வழங்கப்பட்ட தங்குமிட படிச் சலுகைகளை 52 முறை தவறாக பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் எம்பி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முழுவமுமாக மறுப்பதாகவும், அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் Troy Bell கூறியுள்ளார்.

இது தொடர்பான ICAC அமைப்பின் விசாரணைக்கு தான் முழுவதும் ஒத்துழைத்தாகவும், நேர்மையான முறையில் நடந்து கொண்டதாகவும் எம்.பி. தெரிவித்துள்ளார். தன் மீதான புகார்கள் நியாயமற்றது என்ற முறையில் தான் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் Troy Bell கூறியுள்ளார்.

South Australian MP charged with 52 counts of abuse MPs' accommodation in Australia.அடிலெய்ட் –ல் இருந்து 75 கிலோ மீட்டர் சுற்றளவை தாண்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் படிச்சலுகையில் தான் தற்போது முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மாகாண எம்பிக்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையில் இதுவரை ஒரு லட்சம் டாலர்களுக்கு அதிகமாக கணக்கில் வராத சலுகைகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான தன்னாட்சி விசாரணை அமைப்பான ICAC விசாரணையை தொடங்குவதற்கு முன்னதாக, சலுகைகளை பயன்படுத்தியதற்கான பணத்தை செலுத்த முயற்சி செய்தாகவும், இதற்கு முன்னதாக இது போன்ற புகாரில் சிக்கிய மற்றொரு எம்.பி Fraser Ellis 42 ஆயிரத்து 130 டாலர்களை செலுத்தி விட்டதாகவும், ஆனாலும் அவர் மீது கிரிமினல் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் ICAC தெரிவித்துள்ளது.

கோவிட் போன்ற கடுமையான பெருந்தொற்று காலத்தில் இது போன்ற புகார்களில் எம்.பிக்கள் சிக்குவது எதிர் வரும் நாட்களில் நடைபெற உள்ள தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், அது தங்களின் மீதான நற்பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் என்றும் எம்.பி.க்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும், ICAC அமைப்பு தன்னுடைய விசாரணையை தீவிரப்படுத்தும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி Troy Bell இடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. அவர் இதற்கு முன்னதாக 2017 ம் ஆண்டு இதுபோன்ற புகாரில் சிக்கி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜர் ஆனதையும் அந்த அமைப்பு நினைவு கூர்ந்துள்ளது.

Link Source: https://ab.co/3FlZBk3